#Thread அர்ச்சகர்:- என்ன ஜோசியரே கோவிலுக்கு முன்போல் ஆளுகள் வருவதே இல்லையே! குடும்ப நிர்வாகம் வெகு கஷ்டமாகவல்லவா இருக்கிறது. ஜோசியர்: - என்ன காரணம் ? அர்ச்சகர்;- இந்த எழவு எடுத்த சுயமரியாதைதான். ஜோசியர்:- சுயமரியாதை காரணம் என்றால் சுயமரியாதைக்காரர்கள் சாமி இல்லை, (1/n)

3:36 AM · Nov 29, 2021

5
19
3
45
பூதம் இல்லை என்று சொல்லி மக்களைக் கோவிலுக்குள் போகக்கூடாது என்று பிரசாரம் செய்கின்றார்களே அதனாலா? அர்ச்சகர் :- இல்லை - இல்லை அதற்கெல்லாம் நமக்கு பயமில்லை. இன்னமும் ஆயிரந்தடவை வேண்டுமானாலும் சாமியில்லை, பூதம் இல்லை என்று சொல்லட்டும், (2/n)
1
2
0
15
கோவிலை வேண்டுமானாலும் இடிக்க வேண்டுமென்று சொல்லட்டும்.அதனால் நமக்கு ஒன்றும் கெட்டுப் போகாது. ஜோசியர்:-மற்றென்ன காரணம் என்று சொல்லுகிறீர்கள்? அர்ச்சகர்;-கோவில்களுக்குத் தேவதாசிகள் வருகின்றதான முக்கிய கைங்கரியத்தைப் பற்றி கண்டபடி பேசி,அதை நிறுத்தி விட்டார்களல்லவா அதனால்தான் (3/n)
1
2
0
14
ஜோசியர்:- இதற்கும் பக்திக்கும் சம்மந்தமென்ன? இதனால் எல்லாம் மக்களுக்குக் கடவுள் பக்தி குறைந்து விடுமா? அர்ச்சகர்:- கடவுள் பக்தி என்றால் என்ன என்கிறீர்? கடவுள்தான் எங்கும் நிரைந்தவராயிற்றே. இதற்காக ஒரு மனிதன் கோவிலுக்கு வர வேண்டுமா? ஜோசியர்;- மற்றெதற்காக வருகின்றார்கள்? (4/n)
1
3
0
11
அர்ச்சகர்:- இரண்டு காரியத்திற்காகத்தானே கோவிலுக்கு வருகின்றார்கள். 1. தன்னை பக்திவான் என்று பிறர் மதிக்க வேண்டும். அங்கு வரும் நல்ல பெண்களை ஆண்கள் பார்க்கவும் , ஆண் களைப் பெண்கள் பார்க்கவுமான காரியங்களுக்கு என்றாலும், (5/n)
1
1
0
11
இரண்டாவது விஷயத்திற்குத்தான் அதிகம் பேர் வாலிபர்கள் சற்று ஷோக் பேர்வளிகள் சிறிது வயதானவர்களாயிருந்தாலும், சபலமுடையவர்கள் ஆகியவர்கள் வருவது. இப்படிப்பட்ட ஆண்கள் தாராளமாய் வராவிட்டால் குடும்பப் பெண்களும் வருவதில்லை. (6/n)
1
2
0
9
ஆக இப்படிப்பட்ட இரண்டு கூட்டம் வந்தால் தானே காணிக்கை, கட்டளை, இணைப்புத் தரகு ஆகியவைகள் கிடைக்கும். ஆகவே நமக்குக் கோவிலில் மணியடிப்பதில் என்ன பிரயோஜனம்? கோவில் சம்பளமாகிய மாதம் 1-12-0 ரூ. சம்பளமா நமக்குக் கட்டும்? (7/n)
1
2
0
11
ஜோசியர்:- அப்படியா சங்கதி. அவர்கள் இப்படிச் செய்தால் நமக்கு வேறு வழி கிடைக்காதோ? அர்ச்சகர்:- என்ன வழி? ஜோசியர்:- நம்ம ஆளுகளே ஒன்று சேர்ந்து நாம் ஆளுக்கு இரண்டு மூன்று வீதம் பெண்டாட்டிகள் கட்டி, நன்றாய் அலங்கரித்து, தினம் காலை, மாலையில் கோவிலுக்கு வரும்படி செய்தால் என்ன? (8/n)
1
1
0
9
அர்ச்சகர்:- அப்படிச் செய்வது சாத்தியமாகுமா? அவர்களுக்கு நகை, புடவை, மினுக்கு, கண்ட கண்ட இடங்களுக்கு எல்லாம் சென்று அறிமுகம் செய்து கொள்ளுவது முதலாகிய இதெல்லாம் செய்ய வேண்டாமா? பிறகு நமது வீடுகளிலும் போதிய சௌகரியம், வீடு,வாசல், கட்டில், (9/n)
1
1
0
9
படுக்கை முதலிய சௌகரியம் ஆகியவைகள் வேண்டாமா இவற்றிற்கெல்லாம் பணத்திற்கு எங்கே போவது? நாம் ஏதோ தாசிகள் செல்வாக்கினால் கோவிலுக்கு வருகின்றவர்களில் ஒன்று இரண்டு ஆள்களைப் பிடித்து சரி பண்ணி அதுவும் இரகசியம் என்றும், அவசரமென்றும் பயப்படுத்தி 10,5 (10/n)
1
1
0
10
பெற்றுக்கொண்டு கஷ்ட மில்லாமல், நஷ்டமில்லாமல் சம்பாதிப்பது நலமா? அப்படிக்கின்றி நம்ம பெண்களையே தாசிபோல் நடக்க ஏற்பாடு செய்து கொள்ள முடியுமா? ஜோசியர்:- என்னமோ கஷ்ட காலம் உங்களுக்கு மாத்திரமல்ல நமக்கும் கூடத்தான் வந்து விட்டது. (11/n)
1
1
0
12
அர்ச்சகர்:- உங்களுக்கு என்ன வந்தது ? ஜோசியர்:- இப்போது எந்தத் ‘****’ மகன் நம்மிடம் ஜோசியம் பார்க்க வருகிறான்? பிள்ளைக்கும், பெண்ணுக்கும் பொருத்தம் பார்க்கின்ற வேலையே மிகவும் குறைந்து போய்விட்டது. அர்ச்சகர் : - ஏன்? (12/n)
1
1
0
10
ஜோசியர்:- ஏன் என்ன அததுகளே பெண்ணும் - மாப்பிள்ளையுமே பொருத்தம் பார்த்துக் கொள்ளுகின்றன. அர்ச்சகர்:- இருந்தாலும் கிரகதோஷம் பார்க்கவாவது வருவார்களே? ஜோசியர்; - அதாவது வந்தாலும் பரவாயில்லை. அதற்குதான் எங்கு வருகின்றார்கள். (13/n)
1
1
0
9
‘திருட்டுத் **** பிள்ளைகள்’ காயலா வந்தால் - தலைவலி வந்தால் உடனே டாக்டர்கள் இடம் போய் விடுகின்றார்கள். நம்மிடம் வருவதேயில்லை. நம்மைக் கண்டால் சிரிக்கின்றார்கள். என்னடா என்று கேட்டால் சுயமரியாதையடா என்கின்றார்கள். (14/n)
1
1
0
9
அர்ச்சகர்:- சரி, இவ்வளவு ஆனதற்கப்புரம் எனக்கு ஒன்று தோன்றுகிறது. ஜோசியர்:- என்ன? அர்ச்சகர்:- நாமும் சுயமரியாதை பிரசாரம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றி மெள்ளமெள்ள உள்ளே இருந்தே அதை ஒழித்து விடுவது எப்படி என்றால் இப்பொழுது எத்தனையோ தமிழ் பண்டிதர்கள் அப்படித்தான் அதாவது (15/n)
1
1
0
11
“நானும் சுயமரியாதைக்காரன்” என்று சொல்லிக் கொண்டு அதற்குள் பிரவேசித்து அதை ஒழிக்கப் பார்க்கின்றார்களே அதுபோல. ஜோசியர்:- அது நல்லவழிதான். நம்முடைய பெரியவாள் பௌத்தர்கள் காலத்திலும் இப்படித்தான் செய்தார்கள். ஆனால், (16/n)
1
2
0
8
இந்த சு-ம. பயல்கள் (சுயமரியாதைக்காரர்கள்) இது தெரிந்துதான் பு-ம. பயல்களை (புராண மரியாதைக்காரர்களை) அதாவது பிராமணர்களைச் சேர்ப்பதில்லை என்று தீர்மானித்து விட்டார்களே. (17/n)
1
1
0
11
அர்ச்சகர்:- அதுவும் அப்படியா. அப்படியானால் இந்தப்படி ஏழைகளை வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் இந்த சு-ம. காரன்கள் நாசமாய் நிர்மூலமாய்ப் போகட்டும். நாம் போய் இனி காங்கிரசில் சேர்ந்து கொள்ளுவோம். ('சித்திரபுத்திரன்', குடி அரசு - உரையாடல் - 10.05.1931) End ♥️
0
3
1
19